Sunday, May 10, 2009

பாறைச்சுவடுகள்




திரும்பத் திரும்பச் செய்யப்பட்ட
தவறுகளே வாழ்க்கையாகிப் போனது
வயதின் சுமையாலன்றி
ஞபகங்களின் சுமைகளாலேயே
முதுகு கூனல் கண்டது
நடந்து வந்த கால் தடங்கள்
காலமழையில் கரைந்து போயினும்
அவற்றின் பொய் வடிவங்கள் மட்டும்
மனவெளியில் பாறைச்சுவடுகளாய்ப்
பதிந்து ஒட்டிக் கொண்டன
இறந்த காலங்களின் நிழல் வீச்சில்
எதிர் காலங்கள் இருண்டு நெப்பிழந்தன.
ஈட்டாதவற்றின் மீதான ஏக்கங்கள்
ஈட்டியவற்றின் முள் கீறல்கள் மீது
திறந்த புண் மீது அமர்ந்த
ஈக்களாய் மொய்த்தன.
நிழல் விழுந்து
நிலம் கீறல் கண்டது;
பிம்பம் விழுந்து
கண்ணாடி விரிசல் விட்டது.
(வடக்கு வாசல் - ஜூன்,2008)

1 comment:

  1. 'ஞபகங்களின் சுமைகளாலேயே

    முதுகு கூனல் கண்டது'

    'நிழல் விழுந்து

    நிலம் கீறல் கண்டது'

    Nalla varigal uncle :)

    என்றும் அழிக்க முடியாத தடயங்களாய் இருக்கின்றன மனதின் பாறைச்சுவடுகள் !!

    ReplyDelete